தாயான பின்னரும் குறையாத அழகு; தீபிகா படுகோனை பார்த்து ரன்வீர் சிங் கொடுத்த ரியாக்ஷன்!

Published : Feb 13, 2025, 04:03 PM IST

தாயான பிறகும் கூட தீபிகா படுகோன் தோற்றம் ரசிகர்களை பிரமிக்க வைப்பதோடு, இப்படி ஒரு பேரழகியா என்று உருகி உருகி ரசிக்கவும் செய்திருக்கிறது.  

PREV
15
தாயான பின்னரும் குறையாத அழகு; தீபிகா படுகோனை பார்த்து ரன்வீர் சிங் கொடுத்த ரியாக்ஷன்!
Deepika padukone

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உச்சம் தொட்டவர் நடிகை தீபிகா படுகோன். 2006 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஐஸ்வர்யா என்ற கன்னட படம் மூலமாக சினிமாவில் அறிமுகம்மன அவரை பாலிவுட் சினிமா கெட்டியாக பிடித்துக் கொண்டது. ஓம் சாந்தி ஓம், ஹவுஸ்புல், காக்டெய்ல், ரேஸ் 2, பாம்பே டாக்கீஸ், சென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், ஜீரோ, பதான், ஜவான் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் அடுத்தது வெளியானது. 

25
Deepika padukone

கடைசியாக சிங்கம் அகைன் என்ற படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங்கை காதலித்து கரம் பிடித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது. ராம் லீலா படம் மூலமாக காதல் வலையில் விழுந்த நிலையில் ,6 வருடங்களாக இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். இதைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நச்சுன்னு 3 எழுத்தில் மகளுக்கு பெயர் சூட்டிய ரன்வீர் - தீபிகா ஜோடி! வைரலாகும் குழந்தையின் புகைப்படம்!

 

35
Deepika padukone

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் திருமணத்தைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு துவா படுகோன் சிங் என்று பெயரிட்டனர். பொதுவாக ஒரு பெண் தாய்மை அடைந்த பிறகு, அவர்களின் தோற்றசில இயற்கையாகவே சில மாற்றங்கள் நிகழும். ஆனால், தீபிகா படுகோன், தாய்மை அடைந்த பிறகும் கூட இன்னமும் அப்படியே நேச்சுரல் பியூட்டி போல் காட்சியளிக்கிறார்.

45
Deepika padukone

குழைந்தை பிறந்த பின்னர், தீபிகா படுகோனே, துபாயில் நடந்த கார்டியர் 25வது ஆண்டு விழாவில் பங்கேற்று ரெட் கார்பெட்டில் வலம் வந்தார். இதில், அவரது தோற்றம் ரசிகர்களை பிரமிக்க செய்துள்ளது. அதுமட்டுமின்றி உலகளவில் கொண்டாடட்ப்படும் ஸ்டைல் ஐகான்களில் ஒருவராக இருக்கிறார் என்பதை இந்த கார்டியர் 25ஆவது ஆண்டு விழாவில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

தீபிகா படுகோன் வைத்திருக்கும் 6 விலைமதிப்புள்ள பொருட்கள்!

 

55
Deepika padukone

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த தீபிகா படுகோனே, அதில் எனது நண்பர்களுடன் அற்புதமான மாலை என்று பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்த போட்டோக்களில் அவர் கருப்பு நிற கவுன் அணிந்திருந்தார். அவர் அணிந்திருக்கும் மாடர்ன் உடைக்கு மேச் ஆவது போல் டைமண்ட் மற்றும்  எமரால்டு நெக்லஸ் அணிந்துள்ளார்.
 
தீபிகா படுகோனின் இந்த கண்ணை கவரும் இந்த தோற்றம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தீபிகாவின் அழகில் மயங்கிய அவரது கணவர் ரன்வீர் சிங் வாவ் சொக்கி போய் உன்னிடம் விழுந்துவிட்டேன் என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories