மாடலிங் துறையை சேர்ந்த பவித்ரா லட்சுமியை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைய செய்தது, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா, புகழுடன் செய்த சேட்டை எல்லாம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிகழ்ச்சி, இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து, வெள்ளித்திரை வாய்ப்புகளையும் கைப்பற்றினார். அந்த வகையில், காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக அவதாரம் எடுத்த 'நாய் சேகர்' என்கிற படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக பவித்ரா லட்சுமி நடித்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்க்கு பதிலளித்துள்ள பவித்ரா லட்சுமி, சிறிய விபத்தில் சிக்கியதாகவும். பெரிய அடி எதுவும் இல்லை, மூன்று வாரங்கள் ஆகிவிட்டது, தற்போது அந்த விபத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாக தெரிவித்துள்ளார். எனவே புதிய புகைப்படங்களை எடுக்க முடியவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ள பவித்ரா, சுவிசர்லாந்து மற்றும் பாரிசில் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே தற்போது உள்ளது கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும், விரைவில் பவித்ரா முழுமையாக குணமடைய தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.