தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல்வேறு படங்களில் நடித்தவர் கிங் காங். குறிப்பாக இவர் வடிவேலுவுடன் நடித்த காமெடி காட்சிகள் வேற லெவலில் ஹிட் ஆனது. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தியில் ஷாருக்கான், கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் கிங்காங்கின் மூத்த மகள் பெயர் கீர்த்தனா. அவருக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. கிங் காங் மகளின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
24
கிங் காங் மகள் திருமணம்
நடிகர் கிங்காங் தன்னுடைய மகள் திருமணத்திற்காக தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான சிவகார்த்திகேயன், கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி என ஏராளமானவர்களுக்கு நேரில் சென்று பத்திரிகை வைத்து வந்தார். அவர் பத்திரிகை வைத்தபோது எடுத்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. அதில் விஜய் சேதுபதிக்கு கிங் காங் பத்திரிகை வைத்தபோது எடுத்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நடிகர் கிங் காங் உயரம் குறைவானவர் என்பதால் அவருக்காக நடிகர் விஜய் சேதுபதி மண்டியிட்டு அவரிடம் பத்திரிகை வாங்கி இருந்தார். அவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
34
ஆப்சென்ட் ஆன திரைப்பிரபலங்கள்
நடிகர் கிங் காங் மகள் திருமணம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் வைத்து இன்று காலை நடைபெற்றது. இதில் அவருடைய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திரையுலகினர் பலருக்கும் அவர் பத்திரிகை வைத்திருந்தாலும் கயல் தேவராஜ், முத்துக்காளை உள்ளிட்ட நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்; முன்னணி நடிகர்கள் யாரும் இந்த திருமண விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் இத்தனை பேருக்கு தேடி தேடி அழைப்பு விடுத்தும் யாரும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லையே என அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
கிங்காங் மகள் திருமணத்தில் பிரபலங்கள் கலந்துகொள்ளாதது ஏன்?
திரைப்பிரபலங்கள் கிங் காங் மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த உள்ளதால், மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் வைத்து நடத்தி முடித்திருக்கிறாராம் கிங் காங். நடிகர் கிங் காங்கின் உண்மையான பெயர் சங்கர் மகாலிங்கம். இவர் ஊரை தெரிஞ்சுகிட்டேன் படம் மூலம் அறிமுகம் ஆனாலும் இவருக்கு அடையாளம் கொடுத்தது ரஜினியின் அதிசய பிறவி திரைப்படம் தான். அதில் இவர் ஆடும் பிரேக் டான்ஸ் வேறலெவல் ஹிட் அடித்தது.