CM Vijay Back to Acting : தமிழ்நாட்டின் முதலமைச்சரான பின் சினிமாவில் நடிக்கமாட்டேன் என அறிவித்திருந்த விஜய், தற்போது ஒரு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தனது திரைப்பயணத்தில் 69 திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். சினிமாவில் கிடைத்த புகழையும் செல்வாக்கையும் தொடர்ந்து, மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் முழுமையாக ஈடுபட முடிவு செய்தார். அரசியல் களத்தில் இறங்கிய விஜய், தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தற்போது மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
25
சினிமாவில் இருந்து விலகிய விஜய்
அரசியலில் முழு நேரமாக ஈடுபடுவதற்காக இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் அறிவித்திருந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. திரையில் தங்களுக்குப் பிடித்த நடிகரை இனி பார்க்க முடியாதோ என்ற வருத்தத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில், விஜய்யின் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இம்முறை சினிமாவில் அல்ல ஒரு விளம்பர படத்தில் நடிக்க இருக்கிறார்.
35
மீண்டும் நடிக்க உள்ளது ஏன்?
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அரசின் முக்கியச் செயல்பாடுகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் உருவாகும் விழிப்புணர்வு விளம்பரத்தில், முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தோன்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விளம்பரத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பொதுமக்களுக்கு அரசின் திட்டங்களை எளிதில் புரியவைக்கும் வகையில் புதிய விளம்பரப் படம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் விஜய்யே நடிக்க இருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்கத்திற்குப் பெயர் பெற்ற கௌதம் வாசுதேவ் மேனன், இந்த அரசின் விழிப்புணர்வு விளம்பரத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜய்யின் அரசுப் பணிகளுக்கு இடையே, இந்த விளம்பரப் படத்திற்காக இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
55
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
அரசின் நலத்திட்டங்கள், இலவச உதவிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. திட்டங்களின் நோக்கம் மற்றும் அவற்றால் மக்களுக்கு கிடைக்கும் பயன்களை எளிமையான முறையில் எடுத்துரைப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கும். இந்த விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரைவில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜய் மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணியில் யோஹான் என்கிற படம் உருவாக இருந்தது. ஆனால் அப்படம் டிராப் ஆகிப்போனது. அதன்பின் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை. தற்போது இந்த விளம்பரப் படம் மூலம் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.