முன்னதாக படத்தின் வெற்றி கொண்டாட்டம் குறித்து பதிவிட்ட லோகேஷ் கனகராஜ் "இது என்ன ஒரு அருமையான மாலை! நன்றி சிரஞ்சீவி சார்,எங்களை அங்கு சேர்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி சல்மான் கான் சார், மீண்டும் ஒருமுறை நன்றி கமலஹாசன் சார் என எழுதியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் விரைவில் 350 கோடிகளை எட்டவுள்ளது. மேலும் இப்படம் ஏற்கனவே பாக்ஸ் ஆபிஸில் கமல்ஹாசனின் சிறந்த படமாக உள்ளது. இங்கிலாந்தில் 'எந்திரன்' வசூலை முறியடித்து, 11 ஆண்டுகால சாதனையை 12 நாட்களில் முறியடித்து, அப்பகுதியில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை 'விக்ரம்' பெற்றுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கு மாநிலங்களில் இப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் உள்நாட்டிலும் வசூல் வலுவாக உள்ளது.