ரஜினிகாந்த் - இயக்குநர் ஷங்கர் திடீர் சந்திப்பு.. எந்திரன் அடுத்த பாகத்திற்கான திட்டமா?

First Published Jun 15, 2022, 3:42 PM IST

'சிவாஜி: தி பாஸ்' படம் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் ரஜினிகாந்தை சந்தித்துள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

sivaji the boss

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ' சிவாஜி: தி பாஸ் ' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது கடந்த  2007 இதே நாளில் வெளியிடப்பட்டது.  விமர்சகர்களால் நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. மற்றும் உலகளவில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டாரை அவரது இல்லத்தில் சந்தித்ததாக தெரிகிறது. படத்தை ரசிக்க வேண்டிய ஒன்றாக மாற்றியதற்காக தனது முழு நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும்  இயக்குனர் நன்றி தெரிவித்தார்.

director shankar meets rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள இயக்குநர் ஷங்கர், “எங்கள் சிவாஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிவாஜியின் #15 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த மறக்கமுடியாத நாளில் உங்கள் ஆற்றல், பாசம் மற்றும் நேர்மறை ஆரவ் என் நாளை உருவாக்கியது!" என குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு குறித்தான போட்டோஸ் எந்திரன் 3க்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

sivaji the boss

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள இயக்குநர் ஷங்கர், “எங்கள் சிவாஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிவாஜியின் #15 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த மறக்கமுடியாத நாளில் உங்கள் ஆற்றல், பாசம் மற்றும் நேர்மறை ஆரவ் என் நாளை உருவாக்கியது!"  என குறிப்பிட்டுள்ளார்.

click me!