5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!

Published : Dec 05, 2025, 07:46 PM IST

Mirchi Madhavi Reveals Her Cinema Chance Experience : நடிகை மிர்ச்சி மாதவி, சினிமாவில் தனக்கு ஏற்பட்ட Casting Couch அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறி ஒருவர் போன் செய்து தன்னிடம் தவறாகப் பேசியதாக கூறியுள்ளார்

PREV
15
நடிகை மிர்ச்சி மாதவி

தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் மிர்ச்சி மாதவி. பிரபாஸின் 'மிர்ச்சி' படம் மூலம் பிரபலமானார். சமீபத்தில், இவர் Casting Couch குறித்து பரபரப்பான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

25
ஐந்து பேருடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்

மிர்ச்சி மாதவி கூறுகையில், 'ஒருவர் போன் செய்து, பிரகாஷ் ராஜிற்கு மனைவியாக நடிக்கும் கதாபாத்திரம் உள்ளது. ஆனால் 5 பேருடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றார். அதன் அர்த்தம் புரியவில்லை என்றேன். அதற்கு அவர், உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும்' என்றார்.

35
அப்படிப்பட்டவள் இல்லை என்றால் சினிமாவில் வந்திருக்க மாட்டேன்
சுகுமார் சார் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். நான் அப்படிப்பட்டவள் அல்ல, உங்கள் வாய்ப்பு தேவையில்லை என்று கூறினேன். இது நல்ல வாய்ப்பு என அவர் சொல்ல, நான் போனை கட் செய்துவிட்டேன் என மாதவி கூறினார்.
45
எல்லா துறைகளிலும் உள்ளது

Casting Couch எல்லா துறைகளிலும் உள்ளது. ஆரம்பத்தில், ஒரு புதிய இயக்குனர் போன் செய்து, வீட்டில் சந்திக்கலாமா என்றார். அப்போது எனக்கு பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கும் என்று தெரியாது.

55
வீட்டிற்கு வந்து தவறாக...
அவரை வீட்டிற்கு அழைத்தேன். அவர் என்னை நடந்து காட்டச் சொன்னார். பிறகு புடவை கட்டி வரச் சொல்லி, இடுப்பைக் காட்டச் சொன்னார். கோபத்தில், செருப்பால் அடிப்பேன் என எச்சரித்து அனுப்பினேன் என மாதவி கூறினார்.
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories