நடிகர் தனுஷ், இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மந்தமாக உள்ள அதன் டிக்கெட் புக்கிங்கை அதிகரித்து அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக இருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பா பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து கடந்த ஆண்டு தனது நடிப்பில் ரிலீஸ் ஆன ராயன் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த தனுஷ். இந்த ஆண்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற படத்தை இயக்கி கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்தார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்து வரும் தனுஷ், தற்போது தன்னுடைய நான்காவது படத்தின் ரிலீசுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்.
24
தனுஷின் இட்லி கடை
தனுஷ் இயக்கத்தில் தயாராகி உள்ள நான்காவது திரைப்படம் இட்லி கடை. கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்தில் தனுஷ் உடன் ராஜ்கிரண், சமுத்திரக்கனி, பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன், அருண் விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனமும், ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 1ந் தேதி ஆயுதபூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாக இன்பன் உதயநிதி தான் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறார்.
34
புரமோஷனில் பிசியான தனுஷ்
நடிகர் தனுஷ் வழக்கமாக தன் படம் ரிலீஸ் ஆனால் அதன் ஆடியோ லாஞ்சில் மட்டும் பேசிவிட்டு பெரியளவில் புரமோஷன் செய்யமாட்டார் தனுஷ். ஆனால் இட்லி கடை படத்திற்கு அவர் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரமோட் செய்தார். குறிப்பாக கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தார். இதனால் இட்லி கடை படத்திற்கு பெரியளவில் டிக்கெட் முன்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. இட்லி கடை படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அப்படத்தின் டிக்கெட் புக்கிங் மிகவும் மந்தமாகவே அமைந்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு மந்தமாக உள்ளதால், அதனை அதிகரிக்கும் விதமாக அதிரடி ஆஃபரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இட்லி கடை படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் ஃப்ரீ என்கிற அசத்தலான அறிவிப்பை ஒரு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் தளம் அறிவித்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் தனுஷ் படத்துக்கே இப்படி டிக்கெட் கூவி கூவி விற்கும் நிலை வந்துவிட்டதா என மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். இருப்பினும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆவதால், இட்லி கடை படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.