Bomb vs Blackmail : ஒரே நாளில் போட்டி போட்டு ரிலீஸ் ஆன ஜிவி பிரகாஷின் ப்ளாக்மெயில் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்த பாம் ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் செப்டம்பர் 12ந் தேதி மொத்தம் 10 படங்கள் ரிலீஸ் ஆகின. அதில் ஸ்டார் வேல்யூ உள்ள நடிகரின் படங்கள் என்றால் அது இரண்டு தான். ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த ப்ளாக்மெயில் மற்றும் அர்ஜுன் தாஸின் பாம் ஆகியோரின் படங்கள் தான் பெரிய படங்கள். மற்றவையெல்லாம் சிறு பட்ஜெட் படங்கள். இதனால் பாம் மற்றும் ப்ளாக்மெயில் ஆகிய படங்களுக்கு இடையே தான் பாக்ஸ் ஆபிஸிலும் போட்டி நிலவியது. இதில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் எது என்பதை பற்றியும், அது உலகளவில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பற்றியும் பார்க்கலாம்.
24
ப்ளாக்மெயில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த ப்ளாக்மெயில் திரைப்படத்தை மு மாறன் இயக்கி இருந்தார். இவர் இதற்கு முன்னர் இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். கிரைம் த்ரில்லர் படமான இதில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக தேஜு அஸ்வினி நடித்திருந்தார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் லீடிங்கில் உள்ளது. இப்படம் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.23 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
34
பாம் படத்தின் வசூல் எவ்வளவு?
அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்த பாம் திரைப்படத்தை விஷால் வெங்கட் இயக்கி இருந்தார். இவர் இதற்கு முன்னர் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ஷிவாத்மிகா நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கும் முதல் நாளே பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்தன. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பெரியளவில் சோபிக்கவில்லை. முதல் நாள் வெறும் 10 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பாம் மற்றும் ப்ளாக்மெயில் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் வந்தாலும் இந்த வாரமும் மதராஸி திரைப்படம் தான் பாக்ஸ் ஆபிஸில் டாமினேட் செய்து வருகிறது. அப்படம் நேற்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.62 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. அதேபோல் மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படமும் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 40 லட்சம் வசூலித்து இருந்தது. நேற்று ரிலீஸ் ஆன பாம் மற்றும் ப்ளாக்மெயில் படங்களை விட லோகா படம் அதிகம் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.