பாலிவுட் படங்களுக்கு கிடைத்த வெற்றிகள் தென்னிந்திய சினிமா நாயகர்களுக்கு எட்டா கனியாக இருந்த காலம் போய் தற்போது பான் இந்திய அளவில் தென்னிந்திய சினிமாக்கள் மாஸ் காட்டி வருகிறது. அந்த வரிசையில் ராஜமௌலியின் பிரம்மாண்டமான ஆர் ஆர் ஆர் படம் ரூ.1200 கோடிகளை வசூல் செய்து அல்டிமேட் காட்டியது. ரூ.550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மேலும் செய்திகளுக்கு...அஜித்தா இவர்? உடல் எடை கூடி வயதான தோற்றத்தில் அல்டிமேட் ஸ்டார்! வீடு திரும்பும் வைரல் வீடியோ இதோ !
தெலுங்கில் உருவான இந்தப் படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற ஆர் ஆர் ஆர் -ல் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் அதிரடி காட்டி இருந்தனர்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியான கேஜிஎப் அத்தியாயம் 2 உலக அளவில் நல்ல வசூலை பெற்றது. ரூ.1250 கோடிகளை நுழைவுச்சீட்டு வாயிலாக பெற்ற கேஜிஎப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். யாஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.