Biggboss Tamil 5: கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்த அமீரின் அம்மா இவரா..? இணையதளத்தில் வைரலாகி வரும் ஓவியம்!

Published : Dec 23, 2021, 06:39 PM IST

பிக்பாஸ் (Biggboss tamil 5) நிகழ்ச்சியில் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த அமீர் (Amir)... கடந்த சில தினங்களுக்கு முன் தான் கடந்து வந்த பாதை குறித்தும், தன்னுடைய அம்மாவின் கொலை குறித்தும் பேசி, பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களை கலங்க வைத்த நிலையில், தற்போது அவருடைய அம்மாவுடன் இருக்கும் ஓவியம் என்று கூறி... சமூக வலைத்தளத்தில் ஒரு ஓவியம் வைரலாகி வருகிறது.  

PREV
18
Biggboss Tamil 5: கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்த அமீரின் அம்மா இவரா..? இணையதளத்தில் வைரலாகி வரும் ஓவியம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றதுமே, சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே பார்க்கப்பட்டு வருகிறது. முதல் சீசனில் பிக்பாஸ் வீட்டில் துவங்கிய மருத்துவ முத்தத்தை தொடர்ந்து, தற்போது மீண்டும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முத்தக் காட்சிகள் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

28

கடந்த வாரம் ரசிகர்களை முகம் சுளிக்கும் வைக்கும் வகையில், பாவினியிடம் நடந்துகொண்டார் டான்ஸ் கோரியோகிராபர் என்கிற அடையாளத்தோடு,  பிக்பாஸ் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்துள்ள  அமீர்.

 

 

38

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான இந்த நிகழ்ச்சியில், இவர் இப்படி நடந்து கொண்டது மிகப்பெரிய விமர்சனங்களுக்கு வித்திட்டது. இவர் மீது பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் வெறித்தனமான கோவத்திலும் இருந்தனர்.

 

 

48

ஆனால் இவரது சொந்த கதை சோக கதையை கேட்ட பின், இவர் மீது பிக்பாஸ் ரசிகர்களுக்கு கோவம் காணாமல் போய்விட்டது.

 

 

58

இவர் பிறந்ததில் இருந்தே தந்தையை பார்த்ததேஇல்லையாம். இவரையும், இவரது சகோதரரையும் வளர்த்தது இவருடைய தாய் தான். ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக இவருடைய தாய் கொலைசெய்யப்பட்ட இறந்துள்ளார்.

 

68

தாய் - தந்தை இருவரும் இன்றி, அமீரும் அவருடைய சகோதரரும், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் வசித்து, ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் வாழ்ந்ததாக இவர் கூறியதும், பின்னர் தன்னுடைய அம்மாவின் ஆசைக்காகவே நடனத்தில் சாதித்ததாகவும் இவர் கூறியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

78

பல்வேறு போராட்டங்களை கடந்து இவர் சாதித்தது, மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படும் நிலையில்... பிக்பாஸ் ரசிகர்களும், போட்டியாளர்களும் இவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

 

88

அதே நேரம், அமீர்... அவனுடைய அம்மாவுடன் உள்ளார் என்று கூறி, ஒரு ஓவியம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து அருமை என்று பதிவிட்டு வருகிறார்கள். வைரலாகி வரும் புகைப்படம் இதோ...

 

Read more Photos on
click me!

Recommended Stories