ஷிவானிக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது சீரியல்கள் தான் என்றாலும், தற்போது வெள்ளித்திரை பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அதிக முனைப்பு காட்டி வந்தார். சில இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வந்தாலும், மனதிற்கு பிடித்த கதையையும், நல்ல கருத்துள்ள படங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என கண்ணும் கருத்துமாக இருந்தார்.