தயவு செஞ்சி நீக்கிடுங்க: கெஞ்சாத குறையாய் கேட்க்கும் பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா மனைவி! அதிர்ச்சி பதிவு!

First Published | Oct 6, 2021, 2:19 PM IST

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் (Biggboss Seasson 5) கலந்து கொண்டு விளையாடி வரும், பிரபல யூடியூப் விமர்சகர், அபிஷேக் ராஜாவின் (Abishek Raja)  முன்னாள் மனைவி தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் கவனிக்க வைக்கும் படி, விளையாடும் யுக்தியை இரண்டாவது நாளே துவங்கி விட்டார் அபிஷேக். அந்த விதத்தில் நேற்று அனைவரும் கூடி இருக்க, ஒருவரது முகத்தை பார்த்து, இவர் இப்படி, இவர் இப்படி என கூறினார் ஜோசியம் கூறினார்.

பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, திடீர் என தன்னுடைய அம்மாவிடம் ஒரு வருடமாக சரியாக மூஞ்சி கொடுத்து கூட பேசியது இல்லை. எனக்கு எல்லா விதத்திலும் அவங்க பெஸ்ட் தான் கொடுத்திருக்காங்க, பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றதும் அவங்களுடன் இருக்க வேண்டும் என இரண்டாவது நாளே செண்டிமெண்ட் பேசியது கொஞ்சம் ஓவராகவே பார்க்கப்பட்டது.

Tap to resize

இது ஒருபுறம் இருக்க, அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தீபா நடராஜன்... தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

நமக்கு ஒரு துக்கமான சம்பவம் நடந்தால் அதில் இருந்து நம்மை நாமே வெளியே கொண்டு வருவது எவ்வளவு கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படி இருந்தும் ஒரு சிலர் நம்மை வேண்டும் என்றே நம்முடைய கடந்த காலத்தில் ஒரு பகுதியை தூண்டி விடுவதால் நம்முடைய ஒரு நாள் அல்லது ஒரு வாரம் சோகமயமாகி விடுகிறது.

நான் என்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து வாங்க வேண்டும் என்பதை மூன்று வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்டேன். இந்த முடிவை நான் என்னுடைய சுய சிந்தனையுடன் எடுத்தேன். இதன்பிறகு என்னென்ன பிரச்சனை வரும் என்பதை யோசித்து, அதை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதையும் நான் முடிவு செய்துதான் விவாகரத்து என்ற முடிவை எடுத்தேன். இது என் சுயமான முடிவு தான்.

திருமணமான புதிதில் சில பேட்டி இருவரும் இணைந்து கொடுத்திருந்தோம். அந்த பேட்டி விவாகரத்து ஆன பிறகு தான் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. எனவே அந்த வீடியோவை நீக்கி விடுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் ஆனால் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் செவிசாய்க்கவில்லை என்றும் இது தனக்கு வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தற்போது தன்னுடைய முன்னாள் கணவர் ஒரு பெரிய நிகழ்ச்சிக்கும் சென்றுள்ளதால், அவரை பற்றி கூகுளில் தேடும்போது இந்த வீடியோ தான் முதலில் வருகிறது.

இது குறித்து பலரும் என்னிடம் கேட்கும்போது எனக்கு மிகவும் மன அழுத்தமாகவும், மன உளைச்சலாகவும் உள்ளது. எனவே அந்த வீடியோவை நீக்கி விடுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

Latest Videos

click me!