ஷாருகானின் மகன் ஆர்யன் கான் தினமும் போதைப்பொருட்களை ஆர்டர் செய்து வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் ஆர்யன் கான் கைதுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேர் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆர்யன் கானின் தரப்பில் இருந்து, அவருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்ததோடு மட்டும் இன்றி, வரும் 7 ஆம் தேதி வரை NCB காவல் நீடிக்கப்பட்டுள்ளது நீதிமன்றம்.
மும்பை நீதிமன்றத்தில் ஆர்யன் கானை ஆஜர்படுத்திய போது, அவரது செல்போனை NCB அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் ரகசிய வார்த்தைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், இதனால் ஆர்யன் கானுக்கு சர்வதேச அளவில், போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததன் காரணமாகவே... இவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதோடு, வரும் 7 ஆம் தேதி வரை காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவித்துள்ளது.
போதை மருந்து கைப்பற்ற பட்ட கப்பலின் உரிமையாளருக்கும் இரண்டாவது முறையாக தற்போது சம்மன் அனுப்பப்பட்டுளள்து. மேலும் கப்பலுக்கு போதை பொருள் எப்படி வந்தது? சப்பிலே செய்தது யார் என்று? பல்வேறு கோணங்களில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.