BiggBoss Tamil : நிரூப்பை கட்டிப்பிடித்து திடீரென கிஸ் கொடுத்த பாவனி!! ஷாக் ஆன அமீர்- என்ன பிக்பாஸ் இதெல்லாம்?

Ganesh A   | Asianet News
Published : Jan 11, 2022, 09:27 AM ISTUpdated : Jan 11, 2022, 09:30 AM IST

பாவனி, சக போட்டியாளரான நிரூப்பை நேற்றைய எபிசோடில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  

PREV
17
BiggBoss Tamil : நிரூப்பை கட்டிப்பிடித்து திடீரென கிஸ் கொடுத்த பாவனி!! ஷாக் ஆன அமீர்- என்ன பிக்பாஸ் இதெல்லாம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. 

27

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் (BiggBoss 5) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

37

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது இறுதி வாரத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ராஜு, பிரியங்கா, நிரூப், பாவனி, அமீர் ஆகியோர் உள்ளனர்.

47

இவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார். மேலும் அவரும் ரூ.50 லட்சம் பரித்தொகையும் வழங்கப்படும். இந்த வார இறுதியில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

57

பிக்பாஸ் 5-வது சீசனில் அதிக சர்ச்சைகளை சந்தித்தது பாவனி தான். முதலில் காயின் டாஸ்கில் தொடங்கிய சர்ச்சை, பின்னர் அபிநய் உடனான காதல் விவகாரம், அமீர் உடன் முத்த சர்ச்சை என நீண்டுகொண்டே செல்கிறது. 

67

இந்நிலையில், தற்போது மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார் பாவனி. அவர் சக போட்டியாளரான நிரூப்பை நேற்றைய எபிசோடில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

77

அவர் நிரூப்புக்கு முத்தம் கொடுத்ததை பார்த்து அமீர் ஷாக் ஆனதை மீம் போட்டு கலாய்த்தும் வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories