பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்து கொண்ட பாவனியை வயல் கார்டு போட்டியாளராக வந்து அமீர் காதலிக்க துவங்கியது, பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் கண்டென்ட்டுக்காக இப்படி அமீர் செய்கிறார் என்கிற விமர்சனங்கள் முன் வைக்க பட்டது. காரணம் இதற்கு முன்னர் ஏராளமான பிரபலங்கள் காதலை ஒரு கண்டென்டாக மாற்றி விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
மேலும் இருவரும் காதலர்களாகவே இணைந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில்... அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர். இது இவர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பாகவே பார்க்கப்பட்டது. மேலும் அவ்வபோது இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுடைய காதலை வெளிப்படுத்தி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார் பாவனி. அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேள்வி எழுப்பினார். அதற்கு பாவனி ஆமாம் என பதிலளித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ அமீர் உடனான காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இருவரும் பிரியவில்லை. இப்படி வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என தெரிவித்து... இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Throw Back: முழுமையான உடலுறவு இப்படித்தான் இருக்க வேண்டும்..! நடிகை கஜோல் கூறிய அந்தரங்க சீக்ரெட்!