அரோராவை டார்கெட் செய்த போட்டியாளர்கள்; வெளியே அனுப்ப ரெடி - ஷாக் கொடுத்த விஜய் சேதுபதி!

Published : Nov 09, 2025, 04:00 PM IST

Bigg Boss Update Vijay Sethupathi Unexpected Decision: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய புரோமோவில், அரோராவை போட்டியாளர்கள் டார்கெட் செய்ய... ரோஸ்ட் செய்துள்ளார் விஜய் சேதுபதி.

PREV
14
விஜய் சேதுபதியின் நச் கேள்வி:

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி வெற்றிகரமாக 1 மாதத்தை கடந்த பின்னரும்... சிலர் சேப் கேம் ஆடி வரும் நிலையில், இன்னும் சிலர் கேம் உள்ளேயே வராமல் உள்ளனர். இன்றைய புரோமோவில், விஜய் சேதுபதி போட்டியாளர்களை பார்த்து, இந்த ஒரு நாள் கழிந்தால் போதும்... காசு ஒவ்வொரு வாரமும் பேங்க் அக்கவுட்டில் விழுந்து விடுகிறது. என்கிற நினைப்பில் விளையாடி நாட்களை கழிக்கும் போய்ட்டியாளர் யார் என்று கேட்கிறார்.

24
அரோராவை டார்கெட் செய்த போட்டியாளர்கள்:

இதற்க்கு சபரி, அமித் பார்கவ், கனி, உள்ளிட்ட பல போட்டியாளர்கள் அனைவருமே அரோரா பெயரை சொல்கிறார்கள். பின்னர் அரோராவிடம் பேசிய விஜய் சேதுபதி, நீங்கள் நல்லா விளையாடுவீர்கள் என மற்றவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் இன்னும் விளையாட்டுக்குள் வரவில்லை. அப்படி நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்க வேண்டாம். விளையாட முடியாது என நீங்கள் சொன்னால் இப்போதே பிக்பாஸ்ஸிடம் சொல்லி உங்களை வெளியே அனுப்ப சொல்கிறேன் என விஜய் சேதுபதி கூற அரோரா அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

34
அரோராவால் வெளியேறிய துஷார்:

இதுநாள் வரை துஷாருடன் சுற்றி கொண்டு அவரின் ஆட்டத்தை கெடுத்து, துஷார் வெளியே செல்ல முக்கிய காரணமாக இருந்த அரோரா, விஜய் சேதுபதியின் கடுமையான விமர்சனத்திற்கு பின்னராவது, தன்னுடைய விளையாட்டை துவங்குவாரா? என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

44
குரூப்பிஸல் குறையுமா?

அதே போல் குரூப்பிஸம் வைத்து கொண்டு சேப் கேம் விளையாடிவரும், கனி, பிஜே, ரம்யா, சுபி, போன்ற சிலரின் முகத்திரையை விஜய் சேதுபதி கிழித்து தொங்கவிட வேண்டும் என பலர் தங்களின் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் என கூறப்பட்ட நிலையில், நேற்றைய தினம் துஷார் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து இன்று இரண்டாவது நபர் வெளியேற்றப்படுவாரா? அல்லது இந்த வாரமும் ஒரே ஒரு எவிக்ஷன் தானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories