5 மினிட்ஸ் பிக்பாஸ் என்று கேட்ட மகள்கள்: சந்தோஷத்தில் திகைத்து நின்ற சாண்ட்ரா! அழ வைக்கிறீங்களேப்பா!

Published : Dec 23, 2025, 04:45 PM IST

Bigg Boss Tamil 9 Sandra Family Entry : பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது குடும்பம் வீட்டிற்குள் வரவே சந்தோஷத்தில் தன்னை மறந்து நின்றார் சான்ரா. அதன் பிறகு என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

PREV
15
Sandra Amy Daughters in Bigg Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் final லை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் கண்டஸ்டன்ஸ் ஒவ்வொரு குடும்பத்தினரையும் வீட்டிற்குள் அழைத்து வருவது நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. அதில் முதலாவதாக சான்ராவின் குடும்பம் வீட்டிற்குள் வந்துள்ளது. சான்றாவின் இரு மகள்கள் மற்றும் கணவர் பிரஜன் மூவரும் வீட்டிற்குள் வந்தனர். சந்தோஷத்தில் தேய்த்து நின்றார் சான்ரா.

25
ருத்ரா மித்ரா:

பிரஜன் மற்றும் சான்றா இவர்களுக்கு இரட்டை குழந்தைகள். மகள்களின் பெயர் ருத்ரா, மித்ரா . இரண்டு பேரும் மிக அழகான குழந்தைகள். இவர்கள் பிக் பாஸில் செய்யாத சேட்டையே இல்லை அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் குறும்பாகவும் நடந்து கொண்டனர். பிக் பாஸ் கூட குறும்பாகவே விளையாடிக் கொண்டிருந்தார்கள் பிக் பாஸ் இருவருக்கும் குறும்பாகவே விளையாடிக் கொண்டிருந்தார். இரு மகள்களும் சான்ராவை கட்டி அணைத்து அழுதது ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவலையாக இருந்தது. தாய்மை தான் வெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தார் சான்ரா.

35
பிரஜன் கூறும் அறிவுரை:

என் மகள்களும் சான்றாவை அம்மா அழாதீங்க அம்மா என்றெல்லாம் ஆறுதல் கூறினர். ஓடிப்போய் கட்டித் தழுவி தனது அன்பை வெளி காட்டினார் சான்றா அதன் பிறகு சான்ராவை தனியாக அழைத்து உன் விளையாட்டு நீ ஆடு. நீ விட்ட இடத்தை இவங்க எல்லாம் புடிச்சு அவங்க ஃபர்ஸ்ட்ல வராங்க‌. நீ லாஸ்ட்ல போயிட்ட என்று கூறினார். அதாவது இவர் திவ்யாவை மறைமுகமாக கூறுகிறார் என்று ரசிகர் மத்தியில் கூறப்படுகிறது. திவ்யா தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சான்ரா மற்ற ஹவுஸ்மேட்ச் இடம் கூறுவதை ரசிகர்கள் மத்தியில் திவ்யா நல்லவர் என்று பெயர் பெற்றுள்ளார் இன்று மறைமுகமாக கூறியுள்ளார் பிரஜன்.

45
அம்மாவை விட்டு போக மறுக்கும் மகள்கள்:

இதற்குப் பின் நான் உன் விளையாட்டை பார்க்க வேண்டும் என்று சான்ராவிடம் கேட்டுக்கொண்டார். பிரஜன் மற்றும் அவரது இரு குழந்தைகளும் வீட்டிற்கு வந்து நேரம் முடித்து விட்டதால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார். அதற்கு சான்றாவின் இரு மகள்கள் அம்மாவை அனைத்து பிடித்துக் கொண்டு அம்மா நான் போகமாட்டேன் என்று அழுதனர். அது பார்ப்பவர் மத்தியில் மிகவும் கவலையாக இருந்தது. அப்போது பிக் பாஸ் இடம் போய் கேளுங்க என்று சான்ரா கூற இரு மகள்களும் பிக் பாஸ் ஒரு பைவ் மினிட்ஸ் நான் எங்க அம்மா கூட இருந்துக்கறேன் என்று சொல்ல பிக்பாஸும் ஒப்புக்கொண்டார். மகள்களும் அம்மாவை விட்டு பிரிய முடியாதது வருத்தமாக இருந்தது. நீங்க அடுத்த வாரம் வாங்க நான் வந்துருவேன் அப்படின்னு சான்றா கூறி அவர்களை வழி அனுப்பி வைத்தார்.

55
Bigg Boss Tamil 9 Sandra Family Entry

மகள்கள் இருவரையும் பார்ப்பதும், தன் கணவன் கூறும் அறிவுரையும் கேட்டுக்கொண்ட சான்றா: தற்போது மீண்டும் தனது விளையாட்டை புதிதாக தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இரண்டாவது குடும்பமாக யார் வருகிறார் என்று பார்க்கலாம் இந்த வாரம் முழுவதும் பாசமும் குடும்பத்தினர் கூறும் அறிவுரை ஆகவே இருக்க போகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories