தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை சக கானா பாடகர் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டர் இசைவாணி. ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளில் அவர் கணவரை பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனது முன்னாள் கணவர் சதீஷ் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் இசைவாணி. விவாகரத்தான முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பப்லு இசைவாணி பெயரில் போலி சமூக வலைத்தளம் உருவாக்கி மோசடி செய்வதாகவும், தன் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியதாகவும், தன் மீது ஆசிட் அடிப்பேன் என முன்னாள் கணவர் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.