இதற்கிடையில், கைது செய்யப்படுவதற்கு முன் வெளியிட்ட வீடியோவில் திவாகர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னை சட்டவிரோதமாக அடைத்து வைத்து பலர் தாக்கியதாகவும், அதற்கான ஆதாரங்களை காவல்துறையிடம் வழங்கியிருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து, இந்த வழக்கை வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சில காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் அரசுக்கும் காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதேநேரத்தில், தனது பெயரை பயன்படுத்தி சர்ச்சையான வீடியோக்களை வெளியிட்டு, அதிக பார்வைகளும் சந்தாதாரர்களும் பெற்று யூடியூப் சேனல்கள் லாபம் அடைகின்றன என்றும் திவாகர் குற்றம்சாட்டினார். நேர்மையாக உழைத்து வாழ்பவர்களை விட, பிறரை அவமானப்படுத்தி பணம் சம்பாதிக்கும் நடைமுறை அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாகவும் அவர் தனது வீடியோவில் தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.