இந்நிலையில் சினேகன், கன்னிகா ரவி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது பாடலாசிரியர் சினேகனும், வெள்ளித்திரை, சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தற்போது அந்த காதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தலைமையில் திருமணமாக கனிய உள்ளது. இதையடுத்து கன்னிகாவை கரம் பிடிக்க உள்ள கவிஞர் சினேகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.