தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு, அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்குப் முன்பு வீட்டிலேயே தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய யோகிபாபு, மகனுக்கும் எளிமையாக பெயர் சூட்டு விழாவை நடத்தி முடித்தார்.
Yogi babu
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி மஞ்சு பார்கவி என்பவருக்கும் குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. திருமணம், திருமண வரவேற்பு, வளைகாப்பு, மகன் பிறந்தது என எதையுமே சிறப்பாக கொண்டாட முடியாமல் போனதால், மகனின் பெயர் சூட்டு விழாவையாவது பிரபலங்கள் புடைசூழ நடத்தலாம் என திட்டமிட்டிருந்தார்.
Yogi babu
ஆனால் கொரோனா 2வது அலை காரணமாக தன்னுடைய பிறந்தநாளில் வீட்டிலேயே உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மகனுக்கு விசாகன் என பெயர் சூட்டினார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
Yogi babu
கடந்த 22ம் தேதி யோகி பாபு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தற்போது சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் முதல் முறையாக வெள்ளித்திரையில் கால் பதித்துள்ள படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். இன்று அதன் ஷூட்டிங்கிற்காக வந்த யோகி பாபுவிற்கு சர்ப்ரைஸாக படக்குழுவினர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.