Bigg Boss Eviction: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் அதிரடியாக விளையாடி வந்த போட்டியாளர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக வெளியேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு உள்ளதோ அதே போல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மாஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியான பிக்பாஸ், தமிழ் மற்றும் மற்ற தென்னிந்திய மொழிகளில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டாலும், ஹிந்தியில் துவங்கப்பட்டு 18 வருடங்களு மேல் ஆகிறது.
24
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்:
தமிழில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கப்பட்டது. கடந்த 7 சீசன் வரை தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தாலும், பிக்பாஸ் சீசன் 8 மற்றும் 9 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
34
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்:
இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு விமர்சனங்களுக்கு ஆளான போதிலும், விஜய் சேதுபதி வாரம் இருமுறை போட்டியாளர்களை வெளுத்து வாங்குவது தான் ஹை லைட். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போட்டியாளர் ஒருவர் அதிரடியாக வெளியேறியுள்ளார்.
44
உடல்நல குறைவால் வெளியேறிய ஆயிஷா:
ஆனால் அது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அல்ல. தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான். ஏற்கனவே தமிழில் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியவர் தான் ஆயிஷா. தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் சீசன் 9 நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்ததில் இருந்து, தீயாக விளையாடி வந்த நிலையில் தற்போது அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே இவர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.