Ajith
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது.மூன்று நாளில் சுமார் ரூ. 100 கோடி வசூல் செய்து அஜித்தின் வலிமை படம் சாதனை படைத்துள்ளது.
Ajith
போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
Ajith
இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Ajith
2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் பிப்ரவரி 24 அன்று உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியானது.
Ajith
இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் தமிழ்நாடு வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளிலேயே மார் ரூ. 36 கோடி வசூல் செய்து மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.
AK61 update
அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான கதாபாத்திர தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
AK61 update
இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாகவும், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த தபு.. பள்ள வருடங்களுக்கு பிறகு ‘ஏகே 61’ படத்தில் அஜித்துடன் மீண்டும் இணைவார் என்று ஒரு அப்டேட் வந்தது.
AK61 update
தற்போது இளம் ஹீரோ கவின் அஜித் 61-ல் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பது தான் கோலிவுட்டின் ஹாட் நியூஸ்.