விஜய் டிவி பிரியங்காவுக்கு போட்டியாக களமிறங்கும் புது தொகுப்பாளினி... புதிய நிகழ்ச்சி குறித்த அதிரடி அறிவிப்பு

First Published Feb 7, 2021, 6:54 PM IST

காதலே காதல் என்ற ரொமாண்டிக் நிகழ்ச்சி ஒன்றை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளைப் போலவே அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவது வழக்கம். விஜே பிரியங்கா, டிடி, ஜாக்குலின் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
undefined
தற்போதைய நிலவரப்படி பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவருடைய காமெடியும், எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
undefined
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8, ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி புதிய தொகுப்பாளினி ஒருவரை களமிறக்க திட்டமிட்டுள்ளது.
undefined
காதலே காதல் என்ற ரொமாண்டிக் நிகழ்ச்சி ஒன்றை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. நட்சத்திர தம்பதிகள் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் புது விஜே வேறு யாருமல்ல நம்ம பிக்பாஸ் அர்ச்சனா தான்.
undefined
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மகளுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இணைந்துள்ளார்.
undefined
click me!