அறந்தாங்கி நிஷா வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத சோகம்... பிக்பாஸ் வீட்டிற்குள் கதறு அழுது கண்ணீர் விட்ட சம்பவம்

First Published Oct 7, 2020, 10:55 AM IST

இதுவரைக்கும் இந்த விஷயத்தை நான் யார்கிட்டையும் சொன்னது இல்லை. எனக்கு என் வேலை ரொம்ப பிடிக்கும். ஒரு முறை குழந்தையுடன் ஷுட்டிங்குக்காக சென்னை வந்து கொண்டிருந்த போது செங்கல்பட்டில் கார் ஆக்சிடண்ட் ஆகிவிட்டது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கலகலப்பாக சிரிக்கவைக்கும் நிஷா நேற்று கண்கலங்கி அழுதது சக போட்டியாளர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்தது.
undefined
நேற்று போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் 8 பேரை நாமினேட் செய்யவும் பிக்பாஸ் கூறியிருந்தார்.
undefined
ஒவ்வொரும் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த சிரமான விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்தனர். இறுதியாக நிஷா பேசினார். முதலில் தனது கறுப்பு நிறந்தால் தான் சந்தித்து வந்த அவமானங்கள் குறித்து நகைச்சுவையுடன் பேசி சக போட்டியாளர்களை சிரிக்கவைத்தார்.
undefined
பள்ளியில் பிரயரில் நிற்கும் போது கூட என்னை பின்னாடி போய் நிற்க சொல்வார்கள், அப்ப எனக்கு தெரியல. அப்புறம் தான் அழகா இருக்குறவங்களை மட்டும் தான் முன்னால் நிற்க வைப்பார்கள் என தெரிந்தது.
undefined
கல்லூரி நாட்களில் கூட எனக்கு யாரும் லவ் லெட்டர் கொடுத்ததில்லை. என்னை ஒரு கொரியராக கூட பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைகள் மூன்று பேர் கூட பொண்ணு கறுப்பா இருக்கு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்
undefined
என் அத்தை பையன் மட்டும் தான் எனக்கு புரோபோஸ் பண்ணாரு. அவரு ஐ லவ் யூ சொல்லுற நேரம் பவர் கட் ஆகிடுச்சி. இருட்டிலேயே வந்து இந்த இருட்டுக்கு புரோபோஸ் பண்ணிட்டு போயிட்டாரு மனுஷன் என கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த நிஷாவின் குரல் சற்றே மாறியது.
undefined
இதுவரைக்கும் இந்த விஷயத்தை நான் யார்கிட்டையும் சொன்னது இல்லை. எனக்கு என் வேலை ரொம்ப பிடிக்கும். ஒரு முறை குழந்தையுடன் ஷுட்டிங்குக்காக சென்னை வந்து கொண்டிருந்த போது செங்கல்பட்டில் கார் ஆக்சிடண்ட் ஆகிவிட்டது. அந்த விபத்தில் என் 60 நாள் குழந்தையின் காது பிய்ந்து போய்விட்டது. நான் 2 நாளும், பாப்பா 7 நாளும் ஐசியுவில் இருந்தோம்.
undefined
இப்ப பாப்பாவுக்கு காது நல்லா இருக்கு, எப்பவுமே நான் என் வேலையில் யாரையும் பாதிக்க கூடாதுன்னு நினைப்பேன். ஆனால் ஒரு குழந்தை வாழ்க்கையில் நான் விளையாடிவிட்டேன் என சொல்லும் போதே அழ ஆரம்பித்துவிட்டார். உடனே நிஷாவை சக போட்டியாளர்களான ரியோ, அனிதா சம்பத், ரேகா உள்ளிட்டோர் ஆறுதல் கூறி சமாதானம் செய்தனர்.
undefined
click me!