அப்பாவானார் பிக்பாஸ் டேனி... நல்ல செய்தி சொன்ன தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்...!

First Published Jun 29, 2020, 12:32 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகர் டேனிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த நல்ல செய்தியைக் கேள்விப்பட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமார் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் டேனி.
undefined
அந்த படத்தில் “பிரண்டு லவ் மேட்டரு பீல் ஆயிட்டா புள்ள ஆப் அடிச்சா கூல் ஆயிடுவா புள்ள” என்ற ஒற்றை டைலாக்கில் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பின்னர் “மரகத நாணயம்” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
undefined
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-வில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகத்திற்கும், டேனிக்கும் இடையே அடிக்கடி முட்டிக்கொண்டது. கட்டி உருளும் அளவிற்கு சண்டை எல்லாம் போட்டாங்க.
undefined
இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய டேனி, மறுநாளே தனது நீண்ட நாள் காதலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
undefined
2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த காதல் தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
undefined
இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ள டேனி, எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் தொடர்ந்து அளியுங்கள் என பதிவிட்டுள்ளார்.
undefined
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் டேனி - டெனிஷா தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
undefined
click me!