ஆட்டத்தை ஆரம்பித்த பாரதிராஜா... புது சங்கத்தின் அலுவலகத்திற்கு பூஜை போட்டாச்சு...!!

First Published Sep 14, 2020, 1:29 PM IST

பாரதிராஜா தலைமையிலான புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூஜை போட்டாச்சு. வைரல் புகைப்படங்களுடன் தகவல்கள் இதோ...

நடிகர் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் அந்த சங்கம் தொடர்பான பணிகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன.
undefined
கொரோனா நெருக்கடி காலத்தில் ஷூட்டிங் நிறுத்தம், ஓடிடி ரிலீஸ், வேலை இழப்பு, கடனில் தவிப்பு என பல பிரச்சனைகளை திரைத்துறை எதிர்கொண்டது.
undefined
ஆனால் பழைய தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கோ பஞ்சாயத்து செய்ய மட்டுமே நேரம் இருந்ததாகவும், அதனால் தயாரிப்பாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டிய இயக்குநர் பாரதிராஜா, புதிய சங்கம் ஒன்றை அறிமுகம் செய்தார்.
undefined
தாய் சங்கத்தில் இருந்து பிரிந்து செல்வது மிகுந்த வேதனை அளிப்பதாக இருந்தாலும், இது காலத்தின் கட்டாயம் என்பதால் புதிய சங்கத்தை ஆரம்பித்துள்ளதாக பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.
undefined
ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் சங்கம் என 3 சங்கங்கள் உள்ள நிலையில், பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் ஆரம்பாமானது.
undefined
அதற்கான அலுவலக திறப்பு விழா இன்று சென்னையில் உள்ள அண்ணாசாலையில் நடைபெற்றது. பூஜையுடன் நடைபெற்ற புது அலுவலக திறப்பு விழாவில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, டி.ஜி.தியாகராஜன், தனஞ்ஜெயன், எஸ்.ஆர்.பிரபு, லிலித் குமார், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
undefined
இந்த சங்கத்தில் முதற்கட்டமாக 100 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். ஏற்கனவே புதிய சங்கம் சார்பில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிரடி கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்கு விநியோகஸ்தர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
undefined
இந்த சங்கத்தின் நிர்வாகிகள் பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தலைவராக பாரதிராஜா, பொதுச்செயலாளராக டி.சிவா, பொருளாளராக தியாகராஜன், துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன், எஸ்.ஆர்.பிரபு, எஸ்.எஸ்.லலித் குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
undefined
ஆனால் பழைய தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கோ பஞ்சாயத்து செய்ய மட்டுமே நேரம் இருந்ததாகவும், அதனால் தயாரிப்பாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டிய இயக்குநர் பாரதிராஜா, புதிய சங்கம் ஒன்றை அறிமுகம் செய்தார்.
undefined
தயாரிப்பாளர்களுக்காக களமிறங்கியுள்ள பாரதிராஜாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
undefined
click me!