நடந்தே கைலாசாவிற்கு போன கண்ணம்மா.... கையெடுத்து கும்பிட்டு வரவேற்ற நித்யானந்தா... வைரலாகும் மீம்ஸ்...!
First Published | Sep 29, 2020, 4:38 PM ISTவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது நெட்டிசன்களின் சூப்பர் ட்ரோல் கண்டெண்டாக மாறிவிட்டது. விதவிதமாக மீம்ஸ் போட்டு கண்ணம்மாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏன் என்றால் கற்பில் சந்தேகப்பட்டதால் கோவப்பட்ட கர்ப்பிணியான கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறினார்.
கையில் பையுடன் நடந்து சென்று கொண்டே இருக்கும் கண்ணம்மா கதாபாத்திரத்தை பார்த்து இல்லத்தரசிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் நெட்டிசன்கள் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் என்னவோ கண்ணம்மாவை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். அப்படி ஜாலியாக உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் பலவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது...