Samantha: பாத் டவல் கட்டிக்கிட்டு போஸ் கொடுக்குறீங்களா? வித்தியாசமான மாடர்ன் உடையில் வெறியேற்றும் சமந்தா!

First Published | Nov 17, 2021, 3:54 PM IST

வித்தியாசமான மாடர்ன் உடையில்... அசத்தலான போசுகள் மூலம் ரசிகர்களை ரணகள படுத்தியுள்ளார் நடிகை சமந்தா (Samantha). இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மந்தத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் அவரது குடும்பத்தினர் நடிக்க அனுமதி கொடுத்ததால், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு தான் இவருடைய திரையுலக வாழ்க்கையில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தும் படங்கள் கிடைத்தன.

Tap to resize

திருமணத்திற்கு பின்னர் எப்படி பட்ட நடிகைகளாலும் தமிழ் திரையுலகில் நீடிக்க முடியாது என்று இருந்ததை மாற்றி காட்டியவரே சமந்தா தான். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு சில சர்ச்சையான வேடங்களை தேர்வு செய்து நடித்து, அதற்காக பாராட்டுகளையும் பெற்றார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் திடீர் என, காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

இவர்களது பிரிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என பல்வேறு யூகங்கள் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வரை இருவருமே தங்களுடைய விவாகரத்திற்கான உண்மை காரணத்தை வெளிப்படுத்தவில்லை.

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் வித்தியாசமான வெள்ளை நிற கோட் மற்றும் பேன்ட் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த உடையை பார்ப்பதற்கு பாத் ட்ரஸ் போன்றே இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!