Urvashi Alcohol Addiction in Tamil : நடிகை ஊர்வசி, அதிகமாக மது அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தார் என்று பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியான விஷயத்தை கூறியுள்ளார்.
90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழியில் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு நடிகையாக ஊர்வசி சிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை.
25
Bayilvan Ranganathan about Actress Urvashi
ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளால், பார்வையாளர்கள் ஊர்வசி மீது பலமுறை வெறுப்பைக் காட்டியுள்ளனர். அவர் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது என்பது குறித்தும் நடிகை ஊர்வசி அதனால் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உடையவராக மாறினார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஊர்வசி கதாநாயகியாக நடித்த முதல் படமான 'முந்தானை முடிச்சு' படத்திலும் பயல்வான் ரங்கநாதன் நடித்திருந்தார்.
35
Actress Urvashi alcohol issues
பயில்வான் ரங்கநாதன், ஜெம் சினிமாஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ”முந்தானை முடிச்சு பட செட்டில் தான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அதுதான் அவர்களுடைய முதல் திரைப்படம். ஊர்வசி படிப்படியாக ஒரு பிரபலமான நடிகையாக ஆனார். ஊர்வசிக்கு மதுப்பழக்கமும் உண்டு. அவர் நாள் முழுவதும் குடித்துக் கொண்டே இருப்பார். ஒருமுறை கேரவனுக்குள் சென்று ஊர்வசியிடம் பேசினேன். அவரை அதிகமாகக் குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்லி பார்த்தேன். எப்படி குடிப்பழக்கம் வந்தது என்று கேட்டபோது, தனக்கு குடிப்பழக்கம் ஏற்படக் காரணம் தன் கணவர் தான் என்று அவர் கூறினார். அந்த வீட்டில் எல்லோரும் குடிப்பார்கள். அதனால் நான் மட்டும் ஏன் குடிக்கக் கூடாது?" என தோன்றியதாம்.
45
Bayilvan Ranganathan latest interview Tamil
முன்னாள் கணவர் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள். என் வாழ்க்கையில் ஒரு மன அமைதி இல்லை அதனால் நான் அதிகமாக மது அருந்ததொடங்கினேன். உடல்நலப் பிரச்னைகள் இருந்தன. எனக்குத் தூக்கம் வரவில்லை. என்னால் சாப்பிட முடியவில்லை. எனது தனிப்பட்ட பணியாளர்களும் நண்பர்களும் எனக்கு அதிலிருந்து மீள உதவினர் என அவர் கூறியதாக” பேட்டியில் கூறினார். பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயம் இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.
55
Urvashi personal life secrets
நடிகை ஊர்வசி முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. 8 ஆண்டு இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதற்கு பிறகு 2013 ஆம் ஆண்டு ஊர்வசி சென்னையை சேர்ந்த சிவ பிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஜெம் சினிமாஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.