குஷியில் ரேவதி... கண்ணீரில் சந்திரா! சாமுண்டீஸ்வரியின் ஆட்டம் ஆரம்பம் - கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!

Published : Mar 17, 2026, 04:05 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி கார்த்திக்கை பிரித்த சந்திரகலாவை இப்போது சாமூண்டீஸ்வரி அவரது கணவரிடமிருந்து பிரித்துள்ளார்

PREV
15
கார்த்திகை தீபம் சீரியல் சந்திரகலா

ரேவதி மற்றும் கார்த்திக்கின் திருமண வாழ்க்கை முறிவுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சந்திரகலா . தனது அக்காவிடம் இல்லாததை சொல்லி ஏற்றி விட்டு பஞ்சாயத்து வைத்து பிரித்து விட்டார். மேலும் கோயிலில் காசு வெட்டி போட்டு இருவரது திருமண வாழ்க்கை முறிந்து விட்டதாக பேச வைத்தார். இப்போது அதே மாதிரியான நிலைமை சந்திரகலாவிற்கும் வந்து விட்டது.

25
உண்மையை கண்டுபிடித்த கார்த்திக்

கோயில் புதையல் நகைகளை திருடி கடைசியில் கார்த்திக்கின் உண்மையான ஆதாரத்தின் மூலமாக சந்திரகலா பிடிபட்டார். அவர் தான் உண்மையான திருடி என்ற தெரிந்து அதிர்ச்சியடைந்த சாமுண்டீஸ்வரி அவரை போலீசிலும் பிடித்துக் கொடுத்தார். பிறகு சிவனாண்டி ஜாமீனில் எடுக்க மீண்டும் அக்காவின் வீட்டிற்கு வந்து தனது நாடகத்தை அரங்கேற்றினார். அதில், உன் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறேன் என்று கூறி தீக்குளிக்கவும் முயற்சி செய்தார். அதோடு மட்டுமின்றி உனக்காகவும் தான் நான் இப்படியெல்லாம் செய்தேன். நம்முடைய அம்மாவை கொலை செய்த இந்த கொலைகார குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்கை பழி வாங்கவே நான் சிவனாண்டியுடன் கூட்டு சேர்ந்தேன் என்றார்.

35
Chandrakala in Bail

இனிமேல் நான் இப்படி செய்ய மாட்டேன் என்று கூறி காலில் விழுந்து கதறி அழுதார். குடும்பத்தினர் எவ்வளவோ சொல்லியும் கேட்காத சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவை மன்னித்து வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டார். ஆனால், அதற்கு ஒரு கண்டிஷனும் போட்டார். இனிமேல் சிவனாண்டிக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், அவன் கட்டிய தாலியை கழற்றி அவனிடம் கொடுத்துவிட வேண்டும் என்றார்.

45
Karthigai Deepam Serial Today Episode Highlights

அதற்கு சந்திரகலா சம்மதிக்கவே, பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில், தனது தங்கச்சிக்கு இனிமேல் சிவனாண்டியுடன் வாழ விருப்பமில்லை. அதனால், காசு வெட்டி போட்டு அவர்களை பிரித்துவிடுங்கள் என்று சாமுண்டீஸ்வரி கூறவே, அதைக் கேட்ட ஊர் மக்கள் மட்டும் சிவனாண்டியும் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே தனது மகளுக்கு காசு வெட்டி போட்டு அவரது திருமணத்தை முறித்தார். இப்போது அவருடைய தங்கை திருமணத்தையும் முறிக்கிறார் என்றெல்லாம் பேசினார்கள்.

55
சிவனாண்டி மற்றும் சந்திரகலா

சிவனாண்டி தனது மனைவிக்கு இதில் விருப்பமில்லை. இவர் தான் நாடகமாடுகிறார் என்று சாமுண்டீஸ்வரியை பேச, அதன் பிறகு இல்லை, எனக்கு அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். முத்துவேலுவும் தன் பங்கிற்கு வக்காலத்து வாங்க சாமுண்டீஸ்வரி முன்பு எதுவும் எடுபடவில்லை. கடைசியில் சந்திரகலா தனது தாலியை கழற்றி சிவனாண்டி கையில் கொடுத்துவிட்டார். 

பிறகு காசு வெட்டி போட்டு சிவனாண்டி மற்றும் சந்திரகலாவின் திருமண பந்தத்தை முறித்துவிட்டனர். அப்போது ரேவதி தனக்கு நடந்தவற்றை நினைத்து பார்த்தார். தனது சித்தி சந்திரகலா, தனக்கும் கார்த்திக்கிற்கும் இடையிலான திருமண பந்தம் முறிய காரணமாக இருந்தார். இப்போது அவருடைய திருமண வாழ்க்கையே முறிந்துவிட்டது என்று எண்ணி சந்தோஷம் கொண்டார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories