விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு தான். அந்த வகையில்... வாழ்க்கையில் எப்படியும் சாதிக்க விரும்பும் குடும்ப தலைவியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல், 'பாக்கியலட்சுமி'.
பாக்கியாவின் எதார்த்தமான நடிப்பு, அவரது தாய் பாசம், கணவர் மீது இவர் காட்டும் அக்கறை என பாசிட்டிவ் பக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், பாக்கியாவின் கணவர் பழைய காதலியுடன் வைத்துள்ள தொடர்பை குடும்பத்திடம் மறைக்க படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஒரு சில சமயங்களில் கோபியின் அவஸ்தை சிறப்பை வர வைத்தாலும், பல சமயங்களில் கடுப்பை வர வைக்கும்.
இந்த சீரியலில், கோபியின் முன்னாள் காதலி ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான், பாரதிராஜா இயக்கிய ஈரநிலம் படத்தின் மூலம் ஹீரோயின் அறிமுகமான ஜெனீஃபர்.
ராவண தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடிய ஜெனிஃபர் பல ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு பிறகு 2007 ல் கேமிராமேன் காசி விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் சமீபத்தில் தான், மீண்டும் சீரியல்களில் நடிக்க துவங்கினார். அதிலும் பாக்கிய லட்சுமி சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
பின்னர் திடீர் என கற்பமானதாலும், இன்னும் சில நாட்களில் ராதிகாவின் கதாபாத்திரம் வில்லத்தனமான மாற உள்ளதாகவும் கூறி இந்த சீரியலில் இருந்து விலகினார்.
சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் இவர், கடந்த வாரம் கூட... தன்னுடைய வளையக்காப்பில் குத்தாட்டம் போட்ட, விடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை, தற்போது... தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.