Bachchhan Paandey Public Review : ஜிகர்தண்டா இந்தி ரீமேக்.. கலவையான விமர்சங்களை பெற்ற அக்‌ஷய் குமார்

Kanmani P   | Asianet News
Published : Mar 18, 2022, 05:25 PM IST

Bachchhan Paandey Public Review : அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'பச்சன் பாண்டே' கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் குறித்து ரசிகர்களின் ட்வீட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்..

PREV
19
Bachchhan Paandey Public Review : ஜிகர்தண்டா இந்தி ரீமேக்.. கலவையான விமர்சங்களை பெற்ற அக்‌ஷய் குமார்
jigarthanda movie

சூப்பர் ஹிட் ஜிகிர்தண்டா :

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ஜிகிர்தண்டா. 

29
jigarthanda movie

தேசிய விருதை தட்டி சென்ற பாபி சிம்ஹா : 

அசால்ட் சேதுவாக நடித்திருந்த பாபி சிம்ஹாவின் நடிப்பிற்கு கிடைத்த மகுடமாக தேசிய விருதை தட்டி சென்றார். ரசிகர்களை மிகவும் ஈர்த்த இந்த படம் கார்த்திக் சுப்புராஜின் கேரியரில் தீர்ப்பு முனையை கொடுத்தது.

39

ஹிந்தி ரீமேக் ஜிகர்தண்டா :

தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. முன்னதாக இந்த படத்தில் நடிகர் சித்தார்த்  வேடத்தில் ஃபர்ஹான் அக்தர் நடிக்க இருப்பதாகவும், பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது வேடத்தில் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது..

49
Bachchhan Paandey

அக்ஷய் குமார் நடிப்பில் பச்சன் பாண்டே :

பின்னர் அக்ஷய் குமார் நடிப்பது உறுதியானது. இந்த படம் ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இதில்  கிருத்தி சனோன் , ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் அர்ஷத் வார்சி ஆகியோர் நடித்துள்ளனர் .

59
Bachchhan Paandey

க்ரைம் காமெடி திரைப்படம் :

பச்சன் பாண்டே’ திரைப்படம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய இந்த படம் ஒரு க்ரைம் காமெடி திரைப்படம், நடிகர்கள் பங்கஜ் திரிபாதி மற்றும் அர்ஷத் வர்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

69
Bachchhan Paandey

பச்சன் பாண்டே இசை :

அமல் மாலிக் , பி ப்ராக் , ஜானி , விக்ரம் மாண்ட்ரோஸ் மற்றும் ராய் ஆகியோர் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களை குமார், ஜானி , ஃபர்ஹாத் பிவாண்டிவாலா, விக்ரம் மாண்ட்ரோஸ் மற்றும் அசீம் தயானி ஆகியோர் எழுதியுள்ளனர் . படத்தின் பின்னணி இசைக்கு ஜூலியஸ் பாக்கியம் இசையமைத்துள்ளார் 

79
Bachchhan Paandey

நகைச்சுவை மாறா தன்மை :

சமீபத்தில் வெளியான ட்ரைலரின் மூலம்..இந்த படம்  ஒரிஜினலை விஞ்சும் வன்முறைக் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும் நிரம்பி வழிந்துள்ளன. பல காட்சியமைப்புகள் தெலுங்குப் படங்களை நினைவூட்டுகின்றன. ஜிகிர்தண்டா படத்தின் பலமே படம் முழுக்க வரும் இயல்பான நகைச்சுவை. இதிலும் அதே நகைச்சுவை காட்சிகள் இயல்புத்தன்மை மாறாதிருந்தால் சிறப்பு.

89
Bachchhan Paandey

பச்சன் பாண்டே விமர்சனம் :
பச்சன் பாண்டே படம் குறித்த ட்வீட்டர் பதிவுகள் படம் குறித்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிவ்யூ வைரலாகி வருகிறது.
 

99
Bachchhan Paandey

ட்வீட் விமர்சனங்கள் :

சிலருக்கு படம் மிகவும் பிடிக்கும் என்றும்  சிலருக்கு இது சலிப்பை ஏற்படுத்தியதாகவும் குறியுள்ளுனர். அதே நேரத்தில், ட்விட்டரின் ஒரு பகுதியினர் 'பச்சன் பாண்டே' படத்தைப் புறக்கணிக்கக் கோருகின்றனர். 

click me!

Recommended Stories