அட 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகை ராதிகா... வெளியேற இரண்டாவது காரணம் இதுவா? குவியும் வாழ்த்துக்கள்..!

'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நந்திதா ஜெனிபர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், இவர் சமீபத்தில் திடீர் என இந்த சீரியலை விட்டு விலகினார்.
 

இவர் விலகியது குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார். தன்னுடைய முதல் வீடியோவில், பாக்கியலட்சுமி சீரியலில்... மிகவும் அமைதியாக காட்டப்பட்டு கொண்டிருக்கும் ராதிகாவின் கதாபாத்திரம் வில்லையாக வர உள்ளதால் விலகுவதாகவும், மற்றொரு காரணத்தை விரைவில் கூறுவேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவருடன் இணைந்து, வீடியோ வெளியிட்டுள்ள நந்திதா ஜெனிபர்... தற்போது கர்ப்பமாக இருப்பது தான் இந்த தொடரை விட்டு விலக மற்றொரு காரணம் என கூறியுள்ளார் .

நந்திதஜெனிபர் இந்த சீரியலை விட்டு விலகியது, இவரது ரசிகர்களுக்கு சிறு வருத்தத்தை கொடுத்த போதிலும், இந்த நல்ல விஷயத்துக்காக தான் சீரியலை குயிட் செய்துள்ளார் என்பது தெரிந்ததும், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, உடல் நலத்தை நன்கு கவனித்துக்கொள்ளும்படி கூறி வருகிறார்கள்.
பெங்காலி சீரியலான, 'ஸ்ரீமோயீ' என்கிற சீரியலின் ரீமேக்காக தான் 'பாக்கிய லட்சுமி' சீரியல் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜெனிபர் இந்த சீரியலில் இருந்து விலகியதால்... அவருக்கு பதிலாக, பிக்பாஸ் பிரபலமான... ரேஷ்மா நடித்து வருகிறார். தற்போது அமைதியானவராகவே நடித்து வரும் இவரது கதாபாத்திரம் மெல்ல மெல்ல வில்லியாக மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!