பிக்பாஸ் வனிதாவிற்கு 4வது திருமணம்?... வருங்கால கணவர் பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்...!

First Published | Jul 21, 2021, 7:54 PM IST

பிக்பாஸ் வனிதாவிற்கு 4வது திருமணம் உறுதியாக நடக்கும் என ஜோதிடர் ஒருவர் கூறியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சொந்தமாக யூ-டியூப் சேனல் நடந்தி வரும் வனிதா, 3வது முறையாக சினிமா டெக்னீஷியனான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
Tap to resize

அதன் பின்னர் விஜய் டிவியுடன் கைகோர்த்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பங்கேற்ற வனிதா, 4 எபிஸோட்களே முடிந்த நிலையில் ஜட்ஜ் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.
சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலின் நிகழ்ச்சியில் வனிதா கலந்துக் கொண்டார். அதில் ஜோதிடர் குருஜி வனிதாவின் எதிர்காலத்தை கணித்துள்ளார். அதன்படி, வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார் என்றும், அவரது வருங்கால கணவரின் பெயர் ’எஸ்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியலில் நுழைந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாதிரி வனிதாவாலும் வெற்றி பெற முடியும் எனவும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!