பாகுபலி தி எபிக் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய சினிமாவில் பாகுபலி அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு படம் இருக்காது. தென்னிந்திய சினிமாவுக்கு பான்-இந்திய மார்க்கெட்டை திறந்துவிட்ட படம் இது. அதே சமயம், பாலிவுட்டை அதன் அலட்சியத்தில் இருந்து தட்டி எழுப்பியது. பிரம்மாண்டத்திலும், வசூலிலும் தங்களை வெல்ல யாருமில்லை என்ற பாலிவுட்டின் அதீத நம்பிக்கைக்கு விழுந்த அடியாக பாகுபலி அமைந்தது. இப்போது, பாகுபலி முதல் பாகம் வெளியாகி பத்து ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகியுள்ள பாகுபலி தி எபிக் படமும்ம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.
24
பாகுபலி தி எபிக்
பாகுபலியின் இரண்டு பாகங்களையும் இணைத்து, ராஜமௌலியின் மேற்பார்வையில் ரீ-எடிட்டிங் மற்றும் ரீ-மாஸ்டரிங் செய்யப்பட்டு 'பாகுபலி: தி எபிக்' என்ற பெயரில் இப்படம் வெளியானது. அக்டோபர் 31ந் தேதி அன்று இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டு பாகங்களையும் சேர்த்ததால் படத்தின் நீளம் 3 மணிநேரம் 45 நிமிடமாக இருந்தது. ஆனால், இந்த அதிகப்படியான நீளம் பாகுபலி ரசிகர்களைப் பின்வாங்கச் செய்யவில்லை. மாறாக, படத்தைப் பார்த்தவர்களிடமிருந்து கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.
34
வசூல் நிலவரம்
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. பிரபல பாக்ஸ் ஆபிஸ் டிராக்கரான சாக்னில்க் அறிக்கையின்படி, இப்படம் இந்தியாவில் இருந்து ரூ.29.65 கோடி நிகர வசூலையும், ரூ.33.25 கோடி மொத்த வசூலையும் பெற்றுள்ளது. 'பாகுபலி: தி எபிக்' வெளிநாட்டு சந்தைகளில் இருந்து ரூ.11.75 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம், உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் இருந்து ரூ.45 கோடி வசூலித்துள்ளது. உலகளவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் படம் என்கிற பெருமையை 'பாகுபலி: தி எபிக்' பெற்றுள்ளது.
ஆனால், இந்தியாவின் வசூலை மட்டும் கணக்கில் கொண்டால், பாகுபலிக்கு முன்னால் வேறு இரண்டு படங்கள் உள்ளன. அவை இரண்டுமே பாலிவுட் படங்கள். ஹர்ஷவர்தன் ராணேவின் 'சனம் தேரி கசம்' (ரூ.39 கோடி) மற்றும் சோஹம் ஷாவின் 'தும்பாட்' (ரூ. 37.5 கோடி) ஆகியவை ஆகும். அதே சமயம், இந்திய பாக்ஸ் ஆபிஸிலும் பாகுபலி முதலிடம் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வார இறுதியில் இந்த சாதனையை பாகுபலி தி எபிக் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.