Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி

Published : Jun 28, 2026, 05:47 PM IST

Baahubali Unknown Facts: இன்று இந்திய சினிமாவின் வரலாற்று வெற்றிப் படமாக பேசப்படும் 'பாகுபலி', வெளியான முதல் நாளிலேயே கடுமையான நஷ்டத்தை சந்தித்ததாம். அதைப் பற்றி இயக்குநர் ராஜமௌலி மனம் திறந்துள்ளார்.

PREV
15
நஷ்டத்தை சந்தித்த பாகுபலி படம்

இன்று இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகப் பேசப்படும் 'பாகுபலி' வெளியான முதல் நாளிலேயே கடுமையான நஷ்டத்தை சந்தித்தது என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள 'Baahubali: The Torchbearer' ஆவணப்படத்தின் மூலம், படத்தின் ஆரம்பகட்ட போராட்டங்களை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த தகவல்கள் ரசிகர்களிடையே மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

25
ராஜமௌலி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

அந்தக் காலத்தில் ரூ.150 முதல் ரூ.200 கோடி வரை செலவில் உருவான 'பாகுபலி' மிகப்பெரிய ஆபத்தான முயற்சியாக கருதப்பட்டது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் அதிக செலவு ஏற்பட்டதாகவும், அடுத்த நாள் படப்பிடிப்புக்கான நிதியை திரட்ட வேண்டிய சூழல் இருந்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. சில ஆக்ஷன் காட்சிகளுக்கே கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டதால் தயாரிப்பாளர்கள் கடும் அழுத்தத்தில் இருந்தனர்.

35
முதல் நாள் நஷ்டம்

படம் வெளியான முதல் நாளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அப்போது சுமார் ரூ.70 கோடி நஷ்டத்தில் படம் இயங்கிக் கொண்டிருந்ததாக ராஜமௌலி கூறியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் படத்தை விமர்சித்து பதிவுகள் பரவத் தொடங்கின. இதனால் நடிகர் பிரபாஸும் மனவேதனையில் இருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

45
பாகுபலி வசூல்

இந்த நெருக்கடியான சூழலில் ராஜமௌலி எடுத்த முக்கிய முடிவுதான் படத்தின் தலைவிதியை மாற்றியது. தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல, பல மொழிகளிலும் வெளிநாடுகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டார். அந்த முடிவு ரசிகர்களின் வரவேற்பை பெரிதும் அதிகரித்து, வசூலும் வேகமாக உயரத் தொடங்கியது.

55
பிரமாண்டமான சாதனை படைத்த பாகுபலி

இறுதியில் 'பாகுபலி: தி பிகினிங்' உலகளவில் சுமார் ரூ.650 கோடி வசூலித்தது. அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகம் ரூ.1,750 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்திய சினிமாவின் வரலாற்று சாதனையாக மாறியது. ஒரு படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே அதன் வெற்றியை தீர்மானிக்காது என்பதற்கு 'பாகுபலி' சிறந்த எடுத்துக்காட்டாக இன்று வரை குறிப்பிடப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories