‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார். கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.
கோவை அழகியான அதுல்யாவின் குழந்தை தனம் மாறாத முகமும், குறும்புச் சிரிப்புமே பல ரசிகர்களை வசீகரம் செய்து வருகிறது
இந்நிலையில் இவர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படத்தில்... பேரழகியாக ஜொலிக்கிறார். மாடர்ன் உடையை விட, கேரளத்து புடவை படு ஜோர்...
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவு, ஆரம்பத்தில் இருந்தே அதிகம். அந்த வகையில் '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர், நடிப்பில் இந்த ஆண்டு நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த, 'சர்வம் தாளமயம்' படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
மேலும் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக 'சூரரை போற்று' திரைப்படத்திலும் நடித்துள்ளார். துளியும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என தன்னுடைய பாணியில், படங்களை தேர்வு செய்து நடிப்பது தான் இவருடைய வெற்றி என்று கூட கூறலாம்...
சூரரை போற்று படத்திற்கு பின்னர் கதைகளை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும், அபர்ணா பலமுறை... தற்போது அண்ணன் சூர்யாவை தொடர்ந்து தம்பி கார்த்திக்குடன் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் தான்... அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஓணம் பண்டிகை ஸ்பெஷல்லாக அபர்ணா பாலமுரளி, கேரளத்து புடவையில், தலைநிறைய பூ வைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.