Asha Bhosle Lata Mangeshkar Death Coincidences : பின்னணி பாடகி ஆஷா போஸ்லே ஏப்ரல் 12, 2026 அன்று காலமானார். அவரது சகோதரி லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே இறப்பில் நான்கு விசித்திர ஒற்றுமைகள் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தி இசை உலகையே தன் வசம் வைத்திருந்த பிரபல பாடகிகளும், சகோதரிகளுமான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே இன்று நம்மிடையே இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது அக்கா லதா மங்கேஷ்கர் இறந்த நிலையில், ஏப்ரல் 12, 2026 அன்று மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஆஷா போஸ்லே காலமானார். இந்த சகோதரிகளின் மரணத்திலும் சில விசித்திரமான ஒற்றுமைகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
27
ஒரே வயதில் இறந்த லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே
ஆஷா போஸ்லே தனது 92வது வயதில் காலமானார். அவர் செப்டம்பர் 8, 1933 அன்று மகாராஷ்டிராவின் சாங்லியில் பிறந்தார். ஆஷா போலவே, அவரது அக்கா பாரத ரத்னா லதா மங்கேஷ்கரும் தனது 92வது வயதில்தான் இறந்தார். செப்டம்பர் 28, 1929 அன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்த லதா மங்கேஷ்கர், பிப்ரவரி 6, 2022 அன்று காலமானார். கடைசி வரை தனது சகோதரியுடன் ஒற்றுமையாக இருந்து வந்த ஆஷா போஸ்லே தனது சகோதரியை போலவே 92 ஆவது வயதில் காலமாகி இருக்கிறார்.
37
ஒரே மருத்துவமனையில் இறந்த ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர்
ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். மார்பு தொற்று மற்றும் உடல் சோர்வு காரணமாக, ஏப்ரல் 11, 2026 அன்று அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஏப்ரல் 12, 2026 அன்று, பல உறுப்புகள் செயலிழந்ததால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். லதா மங்கேஷ்கர் ஜனவரி 8, 2022 அன்று கோவிட்-19 தொற்று உறுதியானதால் இதே ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, பிப்ரவரி 6, 2022 அன்று அவரும் உடலில் பல உறுப்புகள் செயலிழந்ததால் காலமானார்.
ஆஷா போஸ்லே மற்றும் லதா மங்கேஷ்கரின் மரணத்திற்கான காரணமும் ஒன்று
ஆஷா போஸ்லே பல உறுப்புகள் செயலிழந்ததால் இறந்ததாக ப்ரீச் கேண்டி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதேபோல்தான், லதா மங்கேஷ்கரும் கொரோனாவிலிருந்து மீண்டார், ஆனால் பின்னர் நிமோனியா தாக்கியது. இறுதியில், பல உறுப்புகள் செயலிழந்ததால் அவரும் உயிரிழந்தார். லதா மங்கேஷ்கர் போலவே ஆஷா போஸ்லேவும் பல உறுப்புகள் செயல் இழந்து காலமாகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
57
லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லேவின் டாக்டர் கூட ஒருவரே
லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஆகிய இருவருக்கும் கடைசி நாட்களில் ஒரே மருத்துவர்தான் சிகிச்சை அளித்தார். ஆஷா போஸ்லேவுக்கு டாக்டர் பிரதீத் சம்தானி சிகிச்சை அளித்து, அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். இதேபோல, லதா மங்கேஷ்கருக்கும் கடைசி நேரத்தில் டாக்டர் பிரதீத் சம்தானிதான் சிகிச்சை அளித்து வந்தார்.
67
ஆஷா போஸ்லேவின் தனிப்பட்ட வாழ்க்கை
ஆஷா போஸ்லே தனது 16 வயதில் லதா மங்கேஷ்கரின் தனிப்பட்ட செயலாளர் கண்பத் ராவ் போஸ்லேவை முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஹேமந்த், வர்ஷா, ஆனந்த் என மூன்று குழந்தைகள் பிறந்தனர். பின்னர் ஆர்.டி. பர்மனை இரண்டாவதாக திருமணம் செய்தார், ஆனால் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆஷாவின் இரண்டு பிள்ளைகளான ஹேமந்த் மற்றும் வர்ஷா ஏற்கெனவே இறந்துவிட்டனர்.
தற்போது அவரது குடும்பத்தில் மகன் ஆனந்த் போஸ்லே, மருமகள் அனுஜா சித்ரே, பேத்தி ஜனய் போஸ்லே, பேரன்கள் ரஞ்சய் போஸ்லே மற்றும் சைதன்யா போஸ்லே (ஹேமந்த் போஸ்லேவின் மகன்) ஆகியோர் உள்ளனர். ஹேமந்த் போஸ்லே, இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறி ரமா என்று பெயர் மாற்றிக்கொண்ட சஜிதாவை மணந்தார். இருப்பினும், 2010-ல் ரமா, ஹேமந்திடமிருந்து விவாகரத்து கோரினார்.
77
ஆஷா போஸ்லே தமிழில் பாடிய பாடல்கள்
ஆஷா போஸ்லே ஹிந்தியில் முன்னணியில் இருந்த பின்னணி பாடகி என்றாலும் தமிழிலும் சில முக்கிய பாடல்களை பாடி இருக்கிறார். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும் செண்பகமே செண்பகமே, மீரா படத்தில் வரும் ஓ பட்டர்பிளை பட்டர்பிளை, அலைபாயுதே படத்தில் வரும் செப்டம்பர் மாதம், சந்திரமுகி படத்தில் வரும் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், ஹே ராம் படத்தில் வரும் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, நேருக்கு நேர் படத்தில் வரும் எங்கெங்கே எங்கெங்கே ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாத வரம் பெற்றவை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.