'யானை' படத்தில் அருண் விஜய் மற்றும் ப்ரியா பவானி சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சில வாரங்களுக்கு முன் சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது. அது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் சமுத்திரக்கனி , யோகி பாபு , அம்மு அபிராமி, கே.ஜி.எஃப் ராமச்சந்திர ராஜு, ராதிகா சரத்குமார், ஆடுகளம் ஜெயபாலன, இமான் அண்ணாச்சி, ராஜேஷ், ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், சஞ்சீவ், மற்றும் புகழ் என ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.