20 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாத அந்த ஒரு மேஜிக்; எத்தனை மேடை ஏறினாலும் அதே பாட்டு; ஏ.ஆர். ரஹ்மானின் சிக்னேச்சர் பாடல்!

Published : Mar 24, 2026, 07:12 PM IST

A.R. Rahman Favorite Song to Perform in Tamil: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொள்ளும் அனைத்து மேடைகளிலும் ஒரு குறிப்பிட்ட பாடலைத் தவறாமல் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தப் பாடலின் பின்னணியில் இருக்கும் சென்டிமென்ட் மற்றும் ரகசியம் என்ன?

PREV
14
A.R. Rahman Favorite Song to Perform

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உலகத்தையே தனது இசையால் கட்டிப்போட்டவர். ஆனாலும், அவர் கலந்துகொள்ளும் விருது விழாக்கள், இசைக்கச்சேரிகள், நேர்காணல் நிகழ்ச்சிகள், கிரிக்கெட் மைதானங்கள் என எந்த மேடையாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடாமலோ அல்லது அதைப் பற்றி குறிப்பிடாமலோ அவர் இருந்ததே இல்லை. அவர் "சத்தமில்லாமல்" எல்லா மேடையிலும் பாடும் அந்தப் பாடல் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யங்கள் பற்றி பார்க்கலாம்.

24
அந்த "ஒரே பாடல்" எது?

அந்த பாடல் வேறொன்றும் இல்லை; 'வந்தே மாதரம்' (Vande Mataram) மற்றும் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற தாரக மந்திரம் தான். கடந்த 2009ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது மேடையில் அவர் சொன்ன "எல்லா புகழும் இறைவனுக்கே" என்ற வார்த்தைகள் இன்று வரை அவரது அடையாளமாகவே மாறிவிட்டது.

இதே போன்று தான் அவரது பாடலும். ரஹ்மான் தனது ஒவ்வொரு கச்சேரியின் இறுதியிலும் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். இது தேசப்பற்றைத் தாண்டி, அந்தப் பாடலுக்கும் அவருக்குமான ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பை தெளிவாக காட்டுகிறது.

தமிழ் சின்னத்திரையில் முதல் 5 இடங்களை பிடித்த டாப் 5 நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா?

34
Why AR Rahman says Ella Pugazhum Iraivanukke?

ரஹ்மான் ஒருமுறை பேட்டியில் கூறும்போது, "சில பாடல்கள் ஆன்மீக ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் என்னைத் திடப்படுத்தும். மேடையில் அந்தப் பாடலைப் பாடும்போது எனக்கு ஒருவித நேர்மறை ஆற்றல் கிடைக்கிறது" என்றார். இதனால்தான் புதிய பாடல்கள் எத்தனை வந்தாலும், பழைய மேஜிக்கை அவர் கைவிடுவதில்லை. அப்படித்தான் வந்தே மாதம், முஸ்தபா, அடங்காத அசுரன், சிங்கப்பெண்ணே ஆகிய பாடல்களை பல மேடைகளில் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

44
AR Rahman Favorite Song to Perform

இவ்வளவு ஏன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே அணியின் ROAR 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏஆர் ரஹ்மான் முஸ்தபா என்ற பாடலை பாடி மைதானத்தை மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்களையும் பிரமிக்க வைத்தார்.

16 வருஷமா ஒரே Playist தான் – அதுவும் இவங்க 2 பேர் சாங்க்ஸ் – ஓபனாக பேசி வசமாக மாட்டிக்கிட்ட ஜனனி அசோக் குமார்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories