சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, அனுஷ்கா ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜெகபதி பாபு, ராஜு சுந்தரம், ஜான் விஜய், ஜிஷு சென் குப்தா, லாரிசா போனசி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். சாய் மாதவ் பர்ரா வசனம் எழுதியுள்ளார், சிந்தகிந்தி ஸ்ரீனிவாச ராவ் கதை எழுதியுள்ளார். வித்யாசாகர் நாகவல்லி இசையமைத்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தை ராஜீவ் ரெட்டி மற்றும் சாய்பாபா ஜாகர்லமுடி ஆகியோர் ஃபர்ஸ்ட் ஃப்ரேம் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். 'காட்டி' திரைப்படம் சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.