கைகூடாமல் போன அனுஷ்காவின் முதல் காதல்! யார் அந்த ஆண் தெரியுமா?

Published : Oct 19, 2025, 01:31 PM IST

நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது பள்ளி நாட்களில் நடந்த முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த காதல் கதை தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

PREV
14
அனுஷ்கா ஷெட்டி முதல் காதல்

தென்னிந்திய திரையுலகில் “ஸ்வீட்டி” என்ற பெயரில் ரசிகர்களால் அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி பற்றி ஒரு புதிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. ‘பாகுபலி’ தேவசேனா என உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா, தனது பள்ளி நாட்களில் நடந்த ஒரு சின்ன காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “என் முதல் ஐ லவ் யூ” என்ற சொற்களுடன் தொடங்கும் இந்த நினைவு தற்போது இணையத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

24
குழந்தைப் பருவ காதல்

இதுபற்றி அனுஷ்கா கூறியதாவது, “பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பையன் அவர்மீது மிகவும் விருப்பம் கொண்டிருந்தாராம். ஆனால் நேரில் சொல்லத் தயங்கிய அந்தப் பையன், தன் நண்பன் மூலம் “ஐ லவ் யூ” சொல்லியிருக்கிறான். அதை கேட்டதும் அனுஷ்கா புன்னகைத்தார். ஆனால், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டாராம். “நான் அவனை ஒருபோதும் அந்த கோணத்தில் பார்க்கவில்லை” என்று அனுஷ்கா சொல்லியுள்ளார்.

34
அனுஷ்கா பள்ளிக் காதல்

இந்த அப்பாவித்தனமான காதல் அனுபவம் பலரின் பள்ளி நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளது. காதலை நேரில் சொல்லாமல் நண்பர்கள் மூலம் சொல்லி அனுப்பும் அந்த வெட்கம், நெஞ்சுக்குள் பதியும் புன்னகைகள் யாருக்கு மறக்க முடியுமா? அனுஷ்காவின் பள்ளிக் காதல் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே மாறியுள்ளது. அந்த பையன் யார் என்பது குறித்து அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

44
நடிகை அனுஷ்கா

தற்போது அனுஷ்கா ஷெட்டி தனது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அடுத்தடுத்த படங்களுக்கான தயாரிப்பில் பிஸியாக உள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் மறைவாக வைத்திருக்கும் அனுஷ்காவின் காட்டி படம் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories