விராட் கோலி மகளின் முதல் புகைப்படம்... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சகோதரரின் திடீர் விளக்கம்!

First Published Jan 12, 2021, 7:24 PM IST

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் மகளின் முதல் புகைப்படம் என, வைரலாக பார்க்கப்பட்ட புகைப்படம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் விராட் கோலியின் சகோதரர், விகாஸ் கோலி.
 

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை ரகசியமாக வைத்திருந்தனர்.
undefined
அதன் பின்னர் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி பதிவிட்ட ட்வீட் 2020ம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
undefined
நிறைமாத வயிறுடன் பிரபல மேக்ஸினுக்காக அனுஷ்கா சர்மா நடத்திய போட்டோ ஷூட் உலக அளவில் பிரபலமானது. மார்டன் உடையில் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்திருந்தார் அனுஷ்கா சர்மா.
undefined
அதன் பின்னர் நிறைமாத வயிறுடன் ட்ரெட்மில்லில் நடைப்பயிற்சி செய்யும் அனுஷ்கா சர்மாவின் வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது.
undefined
இந்த நட்சத்திர தம்பதி விரைவில் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
undefined
இந்நிலையில் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் விராட் கோலி, நேற்று அனுஷ்கா சர்மா பெண் குழந்தை பிறந்த தகவலை நேற்று வெளியிட்டார்.
undefined
விராட் கோலி மற்றும் அஷ்கா ஷர்மாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்த நிலையில், விராட் கோலியின் சகோதரர்... குழந்தையின் கால்கள் மட்டும் தெரியும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தங்களுடைய வீட்டிற்கு தேவதை வந்து விட்டார் என்றும், அவரை வரவேற்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
undefined
இவர் பதிவிட்டது அனுஷ்கா - விராட் கோலியின் குழந்தை புகைப்படம் என ரசிகர்கள் அதனை வைரலாக்கி வந்தனர்.
undefined
இதுகுறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள விகாஸ் கோலி, இது விராட் - அனுஷ்காவின் குழந்தையின் புகைப்படம் இல்லை என தெரிவித்து, அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
undefined
click me!