இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்து, விலகியுள்ளார்.
இதை தொடர்ந்து, நடிகை அனுபமாவும் தன்னுடைய இன்ஸ்டாவில் Happy holiday to me எனக் குறிப்பிட்டு புகைப்படம் ஒரே பதிவிட்டிருந்தார்.
இது தான் இவர்களது திருமண சர்ச்சையை கிளப்பியது. ஏற்கனவே காதல் கிசுகிசுவில் சிக்கிய இருவருமே, ஒரே நேரத்தில் விடுப்பு என்று அறிவித்ததால், சுருட்டை முடி அழகி அனுபமாவிற்கும், பும்ராவிற்கும் திருமணம் நடைபெற உள்ளதாக நெட்டிசன்கள் சிலர் கொளுத்தி போட்டனர்.
இந்த தகவல், சமூக வலைத்தளத்தை கலக்கி கொண்டிருக்கும் நிலையில்... இந்த திருமண வதந்தி குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தாயார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்... தன்னுடைய மகள் ஷூட்டிங் காரணமாக குஜராத் சென்றுள்ளதாகவும், கிரிக்கெட் வீரருடன் திருமணம் என வெளியாகும் தகவலில் துளியும் உண்மை என அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தகவல் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.