போதாகுறைக்கு படத்தில் இருக்கும் சினிமா நட்சத்திர பட்டாளங்களும் பஞ்சமில்லை. பல்வேறு முக்கிய கதாப்பாத்திரங்கள் அவரவர்க்கு படத்தின் மீதான ஆவலை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது லியோ திரைப்படத்தில் புது வில்லன் ஒருவர் இணைந்துள்ளார். லியோ படத்தில் ஏற்கனவே இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் வில்லனாக நடித்து வருகின்றனர். அதில் சஞ்சய் தத் மெயின் வில்லன் என கூறப்படுகிறது.