தொகுப்பாளினி பிரியங்கா ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்...! காரணம் இது தான்..!

First Published | Jan 26, 2021, 3:38 PM IST

தற்போது 9 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா  இருந்திருந்தால், ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், தற்போது இவரது ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் கிடடைத்துள்ளது. 
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் விஜே பிரியங்கா. தற்போது பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதுவும் பிரியங்கா - ம.கா.பா ஆனந்த் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றால் அதில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அப்படி காமெடியில் களைகட்டும் இவர்களுடைய ஜோடி மிஸ் ஆனதால் விஜய் டி.வி. ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Tap to resize

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் லான்ச் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. 9 மணி நேரம் நீண்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ம.கா.பா ஆனந்தும், மணிமேகலையும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
VJ கடந்த சில நாட்களாகவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்த புரோமோ வீடியோக்கள் வெளிவந்த நிலையில், அதில் விஜே பிரியங்கா இல்லாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
தற்போது 9 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா l இருந்திருந்தால் இன்னும் காமெடி களைக்கட்டியிருக்கும் என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்த நிலையில், பிரியங்கா ரசிகர்கள் சந்தோஷமாக்கும் வகையில், இனி வரும் நிகழ்ச்சியில் பிரியங்கா தான் கலந்த கொள்வார் என தெரியவந்துள்ளது.

Latest Videos

click me!