Published : Oct 10, 2019, 11:50 AM ISTUpdated : Oct 10, 2019, 11:51 AM IST
பிரபல தனியார் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் அஞ்சனா. திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தும் அதை ஏற்காமல், தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டினார். இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான, 'கயல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான, நடிகர் கயல் சந்திரனை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். குழந்தை பிறந்த பிறகு சில காலம், தொலைக்காட்சி பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்த அஞ்சனா, மீண்டும் தொலைக்காட்சி தொகுப்பு நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வித விதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார். லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.