லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்த அழைப்பு; சர்வதேச அங்கீகாரத்தால் செம குஷியில் அமரன் டீம்!

Published : Mar 04, 2025, 01:56 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆன அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் சந்தோஷத்தில் உள்ளனர்.

PREV
14
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்த அழைப்பு; சர்வதேச அங்கீகாரத்தால் செம குஷியில் அமரன் டீம்!

Amaran in Los Angeles Film Festival : ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த அமரன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேவாகி உள்ளதால் படக்குழு செம குஷியில் உள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். இப்படத்தில் இராணுவ வீரராக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து அமரன் திரைப்படம் உருவானது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது.

24
Sivakarthikeyan, Sai Pallavi

அமரன் திரைப்படம் உலகளவில் ரூ.330 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் அமரன் படைத்திருந்தது. அமரன் படத்தின் 100வது நாள் வெற்றிவிழா அண்மையில் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் படக்குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார் கமல்ஹாசன். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... ரஜினி மீது இவ்ளோ பக்தியா? சூப்பர்ஸ்டாருக்காக சிவகார்த்திகேயன் செய்த தியாகம்!

34
Amaran Movie

அதேபோல் அமரன் படத்தின் நாயகி சாய் பல்லவியும் பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அமரன் பட வெற்றிக்கு பின்னர் பாலிவுட் படம் ஒன்றை இயக்க கமிட்டாகி இருக்கிறார். இதுதவிர நடிகர் தனுஷின் படத்தையும் இயக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படி அமரன் திரைப்படம் பலரது வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், அமரன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.

44
Amaran Movie gets International Recognition

அதன்படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் உலக கலாச்சார திரைப்பட விருது விழாவில் திரையிட அமரன் படம் தேர்வாகி இருக்கிறது. உலகளவில் ஊக்கம் அளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட டாப் 10 சிறந்த படங்கள் தான் இந்த விருது விழாவில் திரையிட தேர்வாகும். அந்த பட்டியலில் அமரன் படமும் உள்ளதால், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் திரையிடும் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.

இதையும் படியுங்கள்...  உங்கள் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர இதை செய்வேன்; சிவகார்த்திகேயன் அறிக்கை!

Read more Photos on
click me!

Recommended Stories